
தாய்லாந்தில் இரவுநேர மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 13 பேர் பலியாகினர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தின் கிழக்கு மாகாணமான சோன்புரில் உள்ள மவுண்டன் பி என்கிற இரவில் இயங்கும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், கூடம் முழுவதும் தீ சுற்றி வளைத்ததில் 4 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 13 பேர் உடல்கருகி பலியானோடு படுகாயமடைந்த 40 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.