இனி ரஷியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது: அறிவிப்பு

ரஷியாவில் இனி ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரஷியாவில் ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது: அறிவிப்பு

ரஷியாவில் இனி ஃபார்முலா - 1 கார் பந்தயம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவின் சாச்சி நகரில்  இந்தாண்டு ஃபார்முலா - 1 கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடைபெற இருந்த நிலையில் உக்ரைன் போர் காரணமாக, அப்போட்டியை ரஷிய அரசு ரத்து செய்தது.

இதனால், உடனடியாக வேறு நாட்டிற்கு பந்தியத்தை மாற்றும் சூழல் ஏற்பட்டதால், இனி வரும் காலங்களில் ஃபார்முலா - 1 கார் பந்தயங்கள் ரஷியாவில் நடைபெறாது என ஃபார்முலா-1 அமைப்பின் தலைமைச் செயலர் ஸ்டெஃபனோ டாமினிகலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தாண்டு ரஷியாவில் நடைபெற இருந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி உக்ரைன் போர் காரணமாக சென்னையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com