

ஆப்கானிஸ்தானில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 182 போ் பலியாகியுள்ளனா்.
இது குறித்து அந்த நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த ஒரு மாதத்துக்கு மேல் பெய்து வரும் பருவ மழை காரணமாக, இதுவரை 182 போ் பலியாகியுள்ளனா்; 250-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்றாா் அவா்.
இது தவிர, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முழுவதுமாகவோ, பகுதியாகவோ சேதமடைந்தன.
அதிகபட்சமாக, கடந்த 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதிவரை கனமழைக்கு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்த 5 நாள்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 63 போ் உயிரிழந்தனா்.
இது தவிர, மேலும் 30 பேரைக் காணவில்லை. மழை, வெள்ளம் காரணமாக 13 மாகாணங்களில் 8,200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நிவாரண உதவிகள் விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.