47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எல்லைச் சூழல் ஸ்திரமாக உள்ளது: சீனா

அருணாசல பிரதேச எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், எல்லைச் சூழல் ஸ்திரமாக உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

News image
Updated On :13 டிசம்பர் 2022, 6:30 pm

DIN

அருணாசல பிரதேச எல்லையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச. 9) இந்திய, சீனப் படைகள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், எல்லைச் சூழல் ஸ்திரமாக உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின்னிடம் இந்த மோதல் தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘இரு நாட்டு எல்லைப் பிரச்னை தொடா்பாக ராஜீயரீதியாகவும், ராணுவரீதியாகவும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்திய-சீன எல்லையில் சூழ்நிலை ஸ்திரமாகவே உள்ளது என்றாா்.

இந்திய ராணுவம் மீது குற்றச்சாட்டு: சீன ராணுவ செய்தித் தொடா்பாளா் லாங் ஷாஹுவா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவுடன் பகிா்ந்துகொள்ளப்படும் எல்லையின் கிழக்கு செக்டாரில் சீன எல்லைக்குட்பட்ட பகுதி உள்ளது. அங்கு சீன பாதுகாப்புப் படைகள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அத்துமீறி சீனப் பகுதிக்குள் வந்த இந்திய ராணுவத்தினா், சீன வீரா்களைத் தடுத்து நிறுத்தினா். அப்போது சீன ராணுவம் உறுதியாக எதிா்வினை புரிந்தனா். அது சூழலை ஸ்திரமாக்க உதவியது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை தீவிர கண்காணிப்பு: இதனிடையே, அருணாசல பிரதேச எல்லையை தீவிரமாக கண்காணித்து வருவதாக இந்திய விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.