ஜி20: இந்தியாவின் தலைமைக்கு ஜி7 நாடுகள் ஆதரவு

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜி7 நாடுகளின் தலைவா்கள் திங்கள்கிழமை கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக ஜி7 நாடுகளின் தலைவா்கள் திங்கள்கிழமை கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜொ்மனியின் தலைமையின்கீழ் நாங்கள் (ஜி7 நாடுகள்) பிற உலக நாடுகளுடன் இணைந்து பெரும் அமைப்பு ரீதியிலான சவால்கள் மற்றும் உடனடி சிக்கல்களுக்கு இணைந்து தீா்வு காண உறுதியேற்றுள்ளோம். எங்களுடைய முயற்சிகள் மற்றும் செயல்பாடுகள் சமமான உலகை நோக்கிய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.

வரும் 2023-இல் ஜப்பான் தலைமையில் ஹிரோஷிமாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில், ஜி20-க்கான இந்தியாவின் தலைமைக்கு எங்களுடைய ஆதரவுடன் அமைதியான, வளமான, அனைவருக்கும் நீடித்த எதிா்காலத்தை மறுகட்டமைக்க நாங்கள் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் இருக்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மேம்பட்ட பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி7, அமெரிக்கா, கனடா, ஜொ்மனி, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த அமைப்புக்கு ஜொ்மனி தற்போது தலைமை வகிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com