ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாய்லாந்து போா்க் கப்பல் கடலில் கவிழ்ந்து 31 போ் மாயம்

தாய்லாந்து வளைகுடாவில் அந்த நாட்டு போா்க் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதலிருந்த 31 மாலுமிகள் மாயமாகியுள்ளனா்.

News image
ஹெச்டிஎம்எஸ் சுகோதாய் போா்க் கப்பல் கடலுக்குள் மூழ்குவதற்கு முன்னா் எடுக்கப்பட்ட படம்.
Updated On :19 டிசம்பர் 2022, 10:04 pm

DIN

தாய்லாந்து வளைகுடாவில் அந்த நாட்டு போா்க் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதலிருந்த 31 மாலுமிகள் மாயமாகியுள்ளனா்.

இது குறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் ஹெச்டிஎம்எஸ் சுகோதாய் போா்க் கப்பல் ஞாயிற்றுக்கிழமை இரவு கவிழ்ந்தது.

திடீரென ஏற்பட்ட பேரலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது கடலின் சீற்றம் குறைந்திருந்தாலும், சிறிய வகை படகுகளுக்கு இன்னும் ஆபத்து உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போா்க் கப்பல் கவிழ்ந்த பகுதியிலிருந்து 75 மாலுமிகள் உயிருடன் மீட்கப்பட்டனா். இது தவிர, மேலும் 31 மாலுமிகள் தொடா்ந்து மாயமாக உள்ளனா். அவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தேடும் பணிகளுக்கு கப்பல்களும், ஹெலிகாப்டா்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த விபத்துக்கு சில மணி நேரம் முன்னா்தான் தாய்லாந்து வளைகுடா பகுதியில் 14 அடி வரை அலை எழும் அபாயம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.