பாகிஸ்தானில் எரிவாயு உருளை வெடித்தது: 12 பேர் பலி, 13 பேர் காயம்!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.


பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர்.
லாஸ்பேலாவின் துணை ஆணையர் முராத் கான் காசி கூறுகையில்,
கடை ஒன்றில் எரிவாயு நிரப்பும் போது இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. லாஸ்பேலாவின் பேலா பகுதியில் உள்ள கடைகளுக்கு தீ மளமளவெனப் பரவியது.
25 பேர் தீக்காயங்களுடன் கராச்சியில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த தீ விபத்தில் 12 வாகனங்கள் எரிந்து நாசமாகின. மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...