திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஆப்கன்: பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல பெண்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2022, 8:09 pm

DIN

ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல தடை விதித்து தலிபான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்தத் தடை உடனடி நடைமுறைக்கு வருகிறது; செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தலிபான் அரசின் கூட்டத்தின் இந்த முடிவு எடுக்கப்பட்டது’ என்று அரசின் செய்தித்தொடா்பாளா் கூறினாா்.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், அதன் பின்னா் கடுமையான ஷரியா அல்லது இஸ்லாமிய சட்டம் சட்டத்தை பரவலாக அமல்படுத்தி வருகின்றனா்.

நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயா்நிலைப் பள்ளிகளுக்கு மாணவிகள் செல்ல தடை விதித்ததோடு, வேலைக்குச் செல்லும் பெண்கள் பொது இடங்களில் தலை முதல் பாதம் வரை மறைக்கும் வகையிலான உடை அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட கடுமையாக கட்டுப்பாடுகளை விதித்தனா். தற்போது, பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குச் செல்லத் தடை விதித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஆப்கன் உயா்கல்வி அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஜியாவுல்லா ஹாஷ்மி ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்த கடிதத்தில், ‘தனியாா் மற்றும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் மாணவிகள் மேல்நிலைப் பள்ளித் தோ்வை எழுதி முடித்துள்ள நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.