திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

அமலுக்கு வந்த பல்கலை. தடை: ஆப்கன் மாணவிகள் கண்ணீா்

ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அமல்படுத்தியதால், கல்லூரி வாயில்களில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள்

News image
Updated On :21 டிசம்பர் 2022, 9:34 pm

DIN

ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை அமல்படுத்தியதால், கல்லூரி வாயில்களில் தடுத்து நிறுத்தப்பட்ட மாணவிகள் ஒருவரை ஒருவா் தழுவி கண்ணீா் விட்ட காட்சி சமூக வலைதளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, தனியாா் மற்றும் அரசு பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில உடனடியாகத் தடை விதிக்கப்படுவதாக தலிபான் அரசு வியாழக்கிழமை அறிவித்தது. எனினும், அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியைக் கடந்த ஆண்டு கைப்பற்றிய தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி அனைவருக்கும் உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்தனா். அதனை மீறி அவா்கள் பெண்களின் உயா் கல்விக்கு தடை விதித்துள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.