நேரலையில் பட்டப்படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்த ஆப்கன் பேராசிரியர்: காரணம் என்ன?

நேரலையில் பட்டப்படிப்பு சான்றிதழ்களை கிழித்து எறிந்த ஆப்கன் பேராசிரியர்: காரணம் என்ன?

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்துள்ள தலிபான்களின் நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழ்களை தொலைக்காட்சி நேரலையில் கிழித்து எறிந்தார். 

ஆப்கனில் பெண்கள் கல்வி கற்பதற்கு தடை விதித்துள்ள தலிபான்களின் நடவடிக்கையை எதிர்த்து பேராசிரியர் ஒருவர் தனது பட்டப்படிப்பு சான்றிதழ்களை தொலைக்காட்சி நேரலையில் கிழித்து எறிந்தார். 

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். பெண்கள் பொதுவெளில் நடமாடுவதிலிருந்து அவர்கள் கல்வி பெறுவது வரை விதிக்கப்படும் தடை உத்தரவுகள் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இஸ்லாமிய பெண்கள் கட்டாயம் புர்கா அணிய வேண்டும் என தலிபான்கள் பிறப்பித்த சமீபத்திய உத்தரவு அந்நாட்டின் பெண்களை போராட்டத்திற்கு தூண்டியது. இந்நிலையில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சி நேரலையில் பதிவு செய்த எதிர்ப்பு தற்போது வைரலாகி வருகிறது. 

தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பங்கேற்ற காபூல் பல்கலைக்கழக பேராசிரியர் விவாதத்தில் பெண்களுக்கு கல்வி கற்க விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து தனது கருத்துக்களை முன்வைத்த வண்ணம் இருந்தார். தொடர்ந்து பேசிய அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த தனது டிப்ளமோ, பட்டப்படிப்பு சான்றிதழ்களை நேரலையிலேயே கிழித்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “இந்த நாட்டில் கல்விக்கு இடமில்லை என்கிறபோது இன்றிலிருந்து எனக்கு இந்த சான்றிதழ்கள் தேவையில்லை.  என்னுடைய சகோதரிகளுக்கும், தாய்க்கும் கல்வி இல்லை என்கிறபோது என்னால் இந்த கல்விமுறையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” எனத் தெரிவித்தார். 

பெண் கல்வியை வலியுறுத்தி பேராசிரியர் மேற்கொண்ட தலிபான்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு பிரசாரம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com