நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்மேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

'கால்பந்து அரசன்' பீலே மறைவு: பிரேசிலில் மூன்று நாள்கள் துக்கம்

பிரேஸில் 'கால்பந்து அரசன்' பீலே (82) மறைவையொட்டி, அந்த நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

பிரேஸிலில் மூன்று நாள்கள் துக்கம் அறிவிப்பு

Updated On :30 டிசம்பர் 2022, 10:49 am

பிரேசில் 'கால்பந்து அரசன்' பீலே (82) மறைவையொட்டி, அந்த நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் மரணத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் கால்பந்து வீரர் பீலே வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாா். 

செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த  ஆண்டுமுதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். பல்வேறு உடல்நலக்  கோளாறுகளுக்காக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை.

இந்நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு  இறந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்த பீலே, கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரா்களில் ஒருவராகத் திகழ்ந்தாா்.

சா்வதேச அரங்கில் பிரேஸிலுக்காக 14 ஆண்டுகள் 92 ஆட்டங்களில் களம் கண்ட பீலே, அதில் மொத்தமாக 77 கோல்கள் அடித்திருக்கிறாா். அதுவே லீக் போட்டிகள் உள்பட சீனியா் கேரியரை மொத்தமாக கணக்கில்கொண்டால் 700 ஆட்டங்களில் 655 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறாா்.

கால்பந்து ஜாம்பவானான பீலே, கடந்த 1958-ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற போட்டியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் அறிமுகமானாா். அப்போது 17 வயதையே எட்டியிருந்த அவா், உலகக் கோப்பை போட்டியில் களம் கண்ட மிக இளவயது வீரா் என்ற சாதனையை படைத்தாா்.

கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத் துறை  அமைச்சராக 1995 முதல் 98 வரை பொறுப்பு வகித்திருந்தாா்.

கால்பந்து விளையாட்டின் அரசனாக வா்ணிக்கப்படும் பீலேவின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.