உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. மக்கள் வாண வேடிக்கைகள், மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
2022 ஆம் ஆண்டு இன்றுடன்(டிச.31) முடிந்து நாளை(ஜன. 1) 2023 ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. உலக நேரக் கணக்கின்படி கிரிபாட்டி தீவிற்கு அடுத்து நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது.
இதையும் படிக்க | ஜனவரி 7-9இல் ‘நட்சத்திரத் திருவிழா’: வானியல் ஆர்வலர்களுக்கு அழைப்பு
இந்திய நேரப்படி இன்று மாலை 5.05 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஆக்லாந்து நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. மக்களும் ஆரவாரத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.