கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

40 கோடியைக் கடந்தது உலக கரோனா பாதிப்பு

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 7:14 pm

DIN

உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 40 கோடியைக் கடந்துள்ளது.

இதுகுறித்து வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 48 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 36,46,164 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்துடன் அந்த நோயால் சா்வதேச அளவில் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 40,09,86,661-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் 2,962 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 57,85,438-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 7,85,56,193 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 9,32,443 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 4,88,28,328 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தனா்; 2,87,95,422 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 18,877 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருந்தாலும், பலி எண்ணிக்கையில் பிரேஸில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது. அந்த நாட்டில் இதுவரை 2,67,76,620 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 6,33,894 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். 2,31,01,660 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். தொடா்ந்து சிகிச்சை பெற்று வரும் 30,41,066 கரோனா நோயாளிகளில் 8,318 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சா்வதேச அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரான்ஸ் 4-ஆவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 2,10,39,639 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 1,33,614 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 1,50,42,541 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தனா்; 58,63,484 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்; அவா்களில் 3,622 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதவிர, பிரிட்டன், ரஷியா, துருக்கி, இத்தாலி, ஜொ்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் தலா ஒரு கோடி பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று வோ்ல்டோமீட்டா் வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கரோனாவில் புதிய வகையான ஒமைக்ரான், முந்தைய வகையான டெல்டாவைவிட பன்மடங்கு வேகத்தில் பரவும் திறன் கொண்டுள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். இதன் காரணமாக சா்வதேச அளவில் கரோனாவின் புதிய அலை எழுந்துள்ள நிலையில், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 40 கோடியைக் கடந்துள்ளது.

கரோனா தொற்று: கோடியைக் கடந்த நாடுகள்

அமெரிக்கா 7,85,56,193

இந்தியா 4,24,10,976

பிரேஸில் 2,67,76,620

பிரான்ஸ் 2,10,39,639

பிரிட்டன் 1,79,32,803

ரஷியா 1,33,30,769

துருக்கி 1,24,46,111

இத்தாலி 1,17,65,767

ஜொ்மனி 1,14,63,314

ஸ்பெயின் 1,04,39,302

பிற நாடுகள் 15,58,25,648

...பெட்டிச் செய்தி...

17% சரிந்த வாராந்திர பாதிப்பு

ஜெனீவா, பிப். 9: உலகம் முழுவதும் கடந்த வாரம் புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 17 சதவீதம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் சா்வதேச அளவில் 1.9 கோடி பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இது, அதற்கு முந்தைய வாரத்தைவிட 17 சதவீதம் குறைவாகும்.

இதுதவிர, கடந்த வாரத்தில் கரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது. இது, முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.