எச்.ஐ.வி.யிலிருந்து குணமடைந்த முதல் பெண்

எய்ட்ஸ் எனப்படும் எச்ஐவி நோய் தாக்கிய பெண்ணுக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, அந்நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்திருக்கிறார்.
எச்.ஐ.வி.யிலிருந்து குணமடைந்த முதல் பெண்
எச்.ஐ.வி.யிலிருந்து குணமடைந்த முதல் பெண்


வாஷிங்டன்: எய்ட்ஸ் எனப்படும் எச்ஐவி நோய் தாக்கிய பெண்ணுக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, அந்நோயிலிருந்து முற்றிலும் குணமடைந்திருக்கிறார்.

உலகிலேயே எச்ஐவியிலிருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்பதும், முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில், ஆண்டிரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்தியபிறகும், அவரது உடலில், எச்ஐவி வைரஸ் இருப்பதற்கான அளவீடுகள் கடந்த 14 மாதங்களில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெம்செல்கள் என்பவை, நமது உடலிலிருக்கும் சிறப்பு செல்களைக் கொண்டு உருவாகும் தனித்திறன் கொண்டவை.

ஸ்டெம்செல் சிகிச்சை அளிக்கப்பட்டு, எச்ஐவியிலிருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்று தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது-

ஏற்கனவே, இரண்டு பேருக்கு இந்த சிகிச்சை பலனளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பெர்லின் மற்றும் லண்டனைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு எச்ஐவியிலிருந்து மிண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com