துபை செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

துபை செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர் சோதனை தேவையில்லை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

இந்தியாவிலிருந்து துபை செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
Published on

இந்தியாவிலிருந்து துபை செல்லும் பயணிகள், விமான நிலையங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டியதில்லை என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் குறையத் தொடங்கியுள்ள நிலையில், துபை வரும் வெளிநாட்டினருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை, துபை விமான நிலையம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, துபை வரும் பயணிகள், புறப்படும் முன்பு விமான நிலையத்தில், ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம், மேற்குறிப்பிட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணம் செய்த 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவு தேவையில்லை என்றும், கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும், துபை விமான நிலையம் வந்தவுடன் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com