பதிலடி தாக்குதலாக ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
ரஷியா - உக்ரைன் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பல கவலை தெரிவித்துள்ளன. ஐ.நா.வும் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனில் கீவ் விமான நிலையத்தில் ரஷியா போர் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பதிலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷிய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் உக்ரைன் தரப்பில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷிய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

