ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

உக்ரைன் போர்: கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது

உக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.

News image
கச்சா எண்ணெய்
Updated On :1 பிப்ரவரி 2024, 8:29 am

DIN

உக்ரைன்-ரஷியா போரால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது.

இன்று காலை முதல் ரஷியா ராணுவப் படை உக்ரைன் மீது  தாக்குதலை நடத்தி வருவதால் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2014, செப்டம்பருக்குப் பிறகு இன்று கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலராக அதிகரித்துள்ளது.

2014-இல் பிரெக்ஸிட் பிரச்னை காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 99 டாலருக்கு அதிகரித்தது. இதுவே பெரிய உயர்வாகக் கருதப்பட்டு வந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலால் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் கச்சா எண்ணெய் 100 டாலரைத் தொட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் கடந்த 110 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே நீடிக்கிறது.

ஐந்து மாநிலத் தோ்தல்கள் முடிவடைந்தவுடன் சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் எரிபொருள்களின் மீதான விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.