பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்...: நிபந்தனை விதிக்கும் ரஷியா

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது.

News image

ரஷிய அதிபர் புதின்

Updated On :25 பிப்ரவரி 2022, 11:14 am

DIN

இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கிவ்வை நோக்கி ரஷியா ராணுவம் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக உக்ரைன் பாதுகாப்பு படை பதிலடி அளித்துவருகிறது. 

போரை நிறுத்தும்படி பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. ஆனால், ஆயுதத்தை விடுத்து உக்ரைன் சரணடைய வேண்டும் என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரஷிய அதிபர் புதின் உத்தரவை தொடர்ந்து, நிலம், வான், கடல் என அனைத்து வழியாகவும் அந்நாடு உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது. முக்கிய நகரங்களில் குண்டு மழை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுவருகிறது.

இதன் காரணமாக, அங்கிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது உலக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.