உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆந்திரம் மாணவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆந்திரம் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை ஆந்திரம்  அரசு அறிவித்துள்ளது. 
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆந்திரம் மாணவர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு 
Published on
Updated on
1 min read


அமராவதி: உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஆந்திரம் மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை ஆந்திரம்  அரசு அறிவித்துள்ளது. 

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே அதிகரித்து வரும் போர் பதட்டங்களுக்கு மத்தியில், சிக்கித் தவிக்கும் ஆந்திரம் மாநில  மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்த அதிகாரிகளை ஆந்திரம் அரசு வெள்ளிக்கிழமை நியமித்தது. உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை ஆந்திரம் அரசு அறிவித்துள்ளது. 

அதன்படி, பி ரவிசங்கர், ஒஎஸ்டி, (மொபைல் எண்-9871999055), எம்விஎஸ் ராமாராவ், உதவி ஆணையர் (9871990081) மற்றும் ஏஎஸ்ஆர்என் சாய்பாபு, உதவி ஆணையர் (9871999430) மற்றும் மின்னஞ்சல் rcapbnd@gmail.com-இல் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உதவி எண் 0863-2340678  மற்றும் வாட்ஸ்அப் எண்- 8500027678 எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com