
ஜெசிந்தா ஆர்டன்
உக்ரைன் மீது பல்முனைத் தாக்குதல்களை நடத்தி வரும் ரஷியா மீது பயணம் மற்றும் வர்த்தகத் தடையை விதித்துள்ளது நியூசிலாந்து.
உக்ரைன் மீது ரஷியா பல்முனைத் தாக்குதலை தொடர்ந்துள்ள நிலையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் இணைந்துள்ள நிலையில், நியூசிலாந்து ரஷியா மீது பயணங்கள் மற்றும் வர்த்தகத் தடையை விதித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன், ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு தேவையான தளவாடங்கள் சரக்கு வர்த்தகத்திற்கு தடை விதித்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷியா உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அங்கு நிகழயுள்ள பேரழிவுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என ஜெசிந்தா தெரிவித்தார்.
இருதரப்பிலான வெளியுறவுத்துறை ஆலோசனைகள் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், தாக்குதல் அதிகரித்தால் மேலும் சில தடைகளை ரஷியா மீது விதிக்க இருப்பதாகவும், ரஷியாவின் செயல் தவறானது என்று உகலமே பேசுகிறது, ஆனால் அவர்கள் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால் உலகின் கண்டனத்தை ரஷியா சந்திக்க நேரிடும் என்று ஜெசிந்தா கூறினார்.
இதையும் படிக்க| உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களின் பயணச் செலவை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு