மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'முன்னறிவிப்பின்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம்' - உக்ரைன் இந்தியத் தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

News image
Updated On :26 பிப்ரவரி 2022, 5:09 am

உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைன் இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர்ச்சூழல் நிலவி வந்தது. இந்த சூழ்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். 

இரு நாள்களாக நடைபெற்ற தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலுக்கு ஐ.நா. அமைப்பு மற்றும் பல உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ருமேனியா, ஹங்கேரி உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன. 

இதன் தொடர்ச்சியாக, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் முன்னறிவிப்பு இன்றி எல்லைப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

'உக்ரைன் எல்லைப் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் அதற்கு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இந்தியர்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்' என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.