நாங்கள் உக்ரைனில்தான் இருக்கிறோம்; எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் இன்று 3-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. ரஷிய தாக்குதலில் உக்ரைன் நிலைகுலைந்துள்ளது. உதவி கேட்டும் உக்ரைனுடன் போரிட உலக நாடுகள் முன்வரவில்லை என உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் நிலவரம் குறித்து அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து அதிபர் ஸெலென்ஸ்கி தப்பித்துவிட்டதாக வதந்தி பரவியது. இதற்கு பதில் அளித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அதிபர் ஸெலென்ஸ்கி விடியோவில், 'நான் உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சியின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் தலைநகர் கீவில் தான் இருக்கிறோம். எங்கள் மக்கள் இங்குதான் இருக்கிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக நாங்கள் ஒன்றிணைந்து போராடிக்கொண்டிருக்கிறோம். இது எங்களுடைய நாடு; நாங்கள் இங்குதான் இருப்போம்' என்று அதில் கூறியுள்ளார்.
மேலும் மற்றொரு விடியோவில், உக்ரைன் ராணுவத்தை சரணடைய தான் சொன்னதாக பரவிய செய்தியும் உண்மையில்லை என்றும் நாட்டுக்காக தொடர்ந்து போரிட்டு வருகிறோம்; ஆயுதங்களை கீழே போடமாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


