

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவில் ரஷியப் படைகள் நுழைந்துள்ளன.
உக்ரைன் மீது ரஷியப் படைகள் கடந்த மூன்று நாள்களாகத் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவுக்குள் ரஷியப் படைகள் நுழைந்துள்ளன. எரிவாயு குழாயை வெடிக்கச் செய்து ரஷியப் படைகள் கார்கீவ் நகருக்குள் நுழைந்துள்ளதாகத் தெரிகிறது.
உக்ரைன் படையினரும் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷிய வாகனங்கள் கார்கீவ் நகருக்குள் நுழைந்துவிட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மக்கள் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 1.50 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.