சீன அதிபர்
சீன அதிபர்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் குடிமக்களை மீட்காமல் இருக்கும் சீனா...காரணம் சொன்ன தூதர்

உக்ரைன் தலைநகரிலிருந்து வெளியேறிவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு சீன தூதர் பேன் சியான்ராங் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

உக்ரைனில் உள்ள சீனர்களை வெளியேற்ற முடியாத அளவுக்கு தற்போது நிலவும் சூழல் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உக்ரைனுக்கான சீன தூதர் பேன் சியான்ராங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார். ரஷிய படையெடுப்புக்கு பிறகு மக்கள் அங்கிருந்த வெளியேற உதவும் வகையில் திட்டம் வகுக்கப்படும் என தூதரகம் தெரிவித்திருந்த நிலையில், பேன் சியான்ராங் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.

சீன தூதரகத்தின் அதிகாரப்பூர்வ வீசாட் கணக்கில் விடியோ வெளியிட்டு பேசிய அவர், உக்ரைன் தலைநகரிலிருந்து வெளியேறிவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், "சூழல் பாதுகாப்பாக மாறும் வரை நாம் காத்திருக்க வேண்டும். பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு அனைவரின் பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் வரை, நாங்கள் தகுந்த ஏற்பாடுகளைச் செய்வோம். 

கடந்த சில நாட்களில், எல்லோரையும் போலவே, நாங்கள் தொடர்ந்து சைரன்கள், வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச் சூடு சத்தத்தைக் கேட்டோம். நாங்கள் தொடர்ந்து அடித்தளத்தில் மறைந்து கொண்டிருக்கிறோம். இது போன்ற காட்சிகளை நாம் முன்பு திரைப்படங்களில் மட்டுமே பார்த்தோம். உள்ளூர் மக்களுடன் சண்டையிட வேண்டாம். 

உக்ரேனிய மக்கள் மிகவும் கடினமான நிலையில் உள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களைத் தூண்டிவிடக் கூடாது. உங்களின் அடையாளங்களை வெளிக்காட்டிக்க வேண்டாம்" என்றார்.

வியாழன் அன்று தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, கிட்டத்தட்ட 1,50,000 மக்களை அண்டை நாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளியுள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பாகவே, பிரிட்டன், அமெரிக்க, ஜப்பான் போன்ற நாடுகள், தங்களின் தூதரக அலுவலர்களை உக்ரைனிலிருந்து வெளியேற்றியது. போர் சூழம் அபாயம் இருப்பதால் மக்கள் வெளியேறும்படி வலியுறுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com