கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம்: ரஷியா அறிவிப்பு

உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 பிப்ரவரி 2022, 8:19 am

உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்த வருகின்றன. இதனால் உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். 

இதனிடையே போரை நிறுத்துவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். ரஷியா - உக்ரைன் இடையே இன்று பிற்பகல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளது.  போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், போர் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட  நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. கீவ்- வாசில்கோவ் சாலை வழியாக மக்கள் வெளியேறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கீவில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.