கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தாக்குதல் வேகத்தைக் குறைத்தது ரஷியா: உக்ரைன் ராணுவம்

ரஷியா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :28 பிப்ரவரி 2022, 7:34 am

ரஷியா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளது. 

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை தொடங்கி இன்று 5 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகரைக் கடந்து முன்னேறி வருகின்றன. இதனால் அந்த நகரங்களிலுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர். உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதனிடையே போரை நிறுத்துவது தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்த ரஷியாவின் அழைப்பிற்கு உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றுள்ளனர். 

இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா குறைத்துள்ளதாக  உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. போர் விமான தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி பெரும்பாலான இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. 

முன்னதாக, பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா அழைப்பு விடுத்திருந்தபோது உக்ரைன் மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.