விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரிட்டனில் கரோனாவால் 1.5 லட்சம் பேர் பலி

கரோனாவால் பிரிட்டனில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1.5 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2022, 12:35 pm

கரோனாவால் பிரிட்டனில் கடந்த 2020-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1.5 லட்சம் பேர் பலியானதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

உலகளவில் கரோனா மற்றும் ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக தொற்று பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. கட்டுப்பாடு நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வரும் சூழலில் பிரிட்டனில் தொற்றின் தீவிரத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், சராசரி தொற்று பாதிப்பும் 1.70 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் கடந்த 2020-லிருந்து  தற்போது வரை 1.5 லட்சம் பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர். நேற்று(ஜன.10) கரோனா தொற்றின் காரணமாக 76 பேர் பலியானதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 1,50,712 ஆக உயர்ந்தது.

மேலும், இதுவரை  தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 1.46 கோடியாக பதிவாகியுள்ளது.

தற்போது, பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப்பரவி வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.