ஒமைக்ரான் பரவலுக்கு கனடா மீது குற்றம்சுமத்தும் சீனா

கனடாவிலிருந்து வந்த ஒரு பார்சல் மூலமாக, சீனாவுக்குள் ஒமைக்ரான் தொற்று பரவியதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: கனடாவிலிருந்து வந்த ஒரு பார்சல் மூலமாக, சீனாவுக்குள் ஒமைக்ரான் தொற்று பரவியதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த பார்சலின் மேல்பரப்பிலும், உள்ளிருந்த பொருள்கள் மற்றும் ஆவணங்களிலும் ஒமைக்ரான் தொற்று இருந்ததாக அந்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

சீனாவில் கனடாவிலிருந்து வந்த பார்சலை ஜனவரி 11ஆம் தேதி வாங்கிய நபருக்கு கடந்த 15ஆம் தேதி ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாகவும், அந்த பார்சல் கனடாவிலிருந்து ஜனவரி 7ஆம் தேதி அனுப்பப்பட்டதகாவும், அது அமெரிக்கா, சீனாவின் ஹாங்காங் வழியாக பெய்ஜிங் வந்தடைந்ததாகவும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் போல, சீனாவில் ஒமைக்ரான் பாதித்தவரின் கரோனா தொற்று தென்படுவதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com