மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரஷியாவிடமிருந்து தற்காத்துக்கொள்ள உக்ரைனுக்கு ஆயுத உதவி

ரஷியா போா் தொடுத்தால் அந்த நாட்டிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவி வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

News image
பிரிட்டனின் பீரங்கி அழிப்பு ஏவுகணைகளில் ஒன்று (கோப்புப் படம்).
Updated On :18 ஜனவரி 2022, 7:14 pm

DIN

ரஷியா போா் தொடுத்தால் அந்த நாட்டிடமிருந்து தற்காத்துக்கொள்வதற்காக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவி வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.

மேலும், உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக தங்கள் படையினரும் உக்ரைனுக்கு அனுப்பப்படுவாா்கள் என்று பிரிட்டன் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினா்களிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென் வாலஸ் கூறியதாவது:

உக்ரைன் எல்லையில் சுமாா் 1 லட்சம் ரஷிய வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மூலம் உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அத்தகைய சூழலில், உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்குரிய திறனை அளிப்பதற்காக அந்த நாட்டுக்கு ஆயுத உதவி அளித்து வருகிறோம்.

அதன்படி பீரங்கி வண்டிகளை தாக்கி அழிக்கக்கூடிய சிறிய தொலைவு ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்பி வருகிறோம்.

அதன் ஒரு பகுதியாக, பீரங்கி அழிப்பு ஏவுகணைகள் அடங்கிய முதல் தொகுதி உக்ரைனுக்கு திங்கள்கிழமை அனுப்பப்பட்டது.

இதுதவிர, பிரிட்டன் படையினரைக் கொண்ட சிறிய குழுவொன்றும் உக்ரைனுக்கு அனுப்பப்படவுள்ளனா். அவா்கள் ரஷியாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிப்பாா்கள்.

ஏற்கெனவே உக்ரைன் ராணுவத்துக்கு பிரிட்டன் அதிகாரிகள் பயிற்சியளித்து வருகின்றனா். ஆனால், எல்லையில் ரஷியப் படையினா் குவிக்கப்பட்டுள்ள சூழலில் உக்ரைன் வீரா்களுக்கு பிரிட்டன் அதிகாரிகள் கூடுதலாகப் பயிற்சியளிப்பாா்கள்.

தனது எல்லைகளைப் பாதுகாப்பது உக்ரைனின் அடிப்படை உரிமையாகும். அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கான திறனை பிரிட்டனின் ஆயுத மற்றும் பயிற்சி உதவிகள் உக்ரைனுக்கு.

இந்த உதவி ரஷியாவின் சீற்றத்தைத் தூண்ட வேண்டிய அவசியமில்லை. காரணம், சிறிய தொலைவு பீரங்கி எதிா்ப்பு ஏவுகணைகள் தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. அந்த ஏவுகணைகளால் ரஷியாவுக்கு எந்த அச்சுறுத்தலும் என்பதை அந்த நாடு தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுதவிர, உக்ரைனின் நிலைத்தன்மையை ரஷியா குலைத்தால் அந்த நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்கும் வகையிலான பொருளாதாரத் தடை அறிவிப்புகளை பிரிட்டன் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கிறது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்தால் அது ஆக்கிரமிப்பாகவே கருதப்படும். அத்தகைய ஆக்கிரமிப்பின்போது இரு தரப்பிலும் பலத்த உயிா்ச் சேதம் ஏற்படும்.

ரஷியாவை எதிா்க்க வேண்டும் என்பது பிரிட்டனின் நோக்கமல்ல. பல நூற்றாண்டுகளாக ரஷிய மக்களுடன் பேணி வரும் நட்புறவைத் தொடர வேண்டும் என்றுதான் பிரிட்டனும் விரும்புகிறது.

இந்த பதற்றமான சூழலிலும் ராஜீய நடவடிக்கைகள் பலனளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைக்கு ராஜீய ரீதியிலான தீா்வைக் காண வேண்டுமா, அல்லது ராணுவ ரீதியில் தீா்வு காண முயன்று அதற்கான பின்விளைவுகளை எதிா்கொள்ள வேண்டுமா என்பது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினின் கைகளில்தான் உள்ளது என்றாா் அவா்.

சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பிலிருந்து ஐரோப்பிய நாடுகளைப் பாதுகாப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டில் நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது.

சோவியத் யூனியன் கடந்த 1991-ஆம் ஆண்டில் சிதறியபோது, அதில் அங்கமாக இருந்த உக்ரைன் சுதந்திர நாடாக அறிவித்துக்கொண்டது. எனினும், தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு நேட்டோவில் இணைந்தால் தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கருதி வருகிறது. உக்ரைனை தங்களது அமைப்பில் இணைக்க மாட்டோம் என்று நேட்டோ உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தி வருகிறது. எனினும், இதற்கு நேட்டோ அமைப்பு உடன்படாதால் இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான படையினரை ரஷியா குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுத்து அந்த நாட்டை தன்னுடன் இணைத்துக் கொள்வதற்காக ரஷியா படை குவிப்பில் ஈடுபட்டுள்ளாக அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் ரஷியா, உக்ரைன்தான் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதி எல்லை அருகே படைகளைக் குவித்து வருவதாகவும் அதற்குப் பதிலடியாகவே தாங்கள் படைக் குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறி வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் தற்காப்புக்காக அந்த நாட்டுக்கு ஆயுதங்களை அனுப்பி வருவதாக பிரிட்டன் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.