சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

சிங்கப்பூா் ஒமைக்ரானுக்கு முதல் பலி

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகைக் கரோனா பாதிப்பால் முதல்முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா்.

News image
Updated On :22 ஜனவரி 2022, 7:09 pm

DIN

சிங்கப்பூரில் ஒமைக்ரான் வகைக் கரோனா பாதிப்பால் முதல்முறையாக ஒருவா் பலியாகியுள்ளாா். இதுகுறித்து சேனல் நியூஸ் ஆசியா தொலைக்காட்சி தெரிவித்துள்ளதாவது:

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 92 வயது மூதாட்டி, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தாா். இதுவரை கரோனா தடுப்பூசி எதுவும் செலுத்திக் கொண்டிராத அவருக்கு, ஏற்கெனவே பல்வேறு மருத்துவ உபாதைகள் இருந்து வந்தன.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 நாள்களுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா். அவரது இறப்பு குறித்து ஆய்வு செய்த மருத்துவா்கள், ஒமைக்ரான் வகை கரோனா ஏற்படுத்திய பாதிப்பினால்தான் மரணம் ஏற்பட்டதாக தற்போது அறிவித்துள்ளனா் என்று சேனல் நியூஸ் ஆசியா தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.