மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஷியாவில் 65 ஆயிரத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு!

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65,109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜனவரி 2022, 12:20 pm

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65,109 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ரஷியாவில் மொத்த பாதிப்பு 11,173,300 ஆக உயர்ந்துள்ளது. 

நேற்று முன்தினம் பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், இன்று 65 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. நேற்றைய பாதிப்பு 63,205 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 24 மணி நேரத்தில் மாஸ்கோவில் அதிகபட்சமாக 19,509 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 655 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 326,767 ஆக உயர்ந்துள்ளது. 

அதேபோன்று ஒரேநாளில் 21,714 பேர் நோயிலிருந்து மீண்ட நிலையில், மொத்தம் 10,045,336 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.  தற்போது 801,197 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ரஷிய சுகாதார மையம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.