
இந்தோனேசியாவில் இரு தரப்பினர்கள் மோதிக் கொண்டதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் மேற்கு பபுவா மாகாணத்தில் இரவுக் கொண்டாடத்தின்போது இரு தரப்பினருக்கு ஏற்பட்ட திடீர் மோதலில் 19 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் பேசிய ஆடம் எர்விந்தி , ‘ திங்கள்கிழமை இரவு சோராங் நகரில் உள்ள கேளிக்கை விடுதியில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. தாக்குதலின்போது விடுதியில் தீ விபத்து ஏற்பட்டதில் 19 பேர் பலியாகியுள்ளனர். காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது’ எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.