குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு அவசர கூட்டம்

குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜெனீவா: குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தவுள்ளது. 

புதிதாக குரங்கு அம்மை உறுதி செய்யப்படுவோரின் வாராந்திர எண்ணிக்கை 77 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, உலகம் முழுவும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

புதிதாக குரங்கு அம்மை நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோரில் பெரும்பான்மையானவா்கள் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியதாவது:

கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான குரங்கு அம்மை நோய் பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. அதனால் அவசர ஆலோசனைக் கூட்டம் அவசியம்.

மேலும், ஜூலை 18 ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என்றும், அவசர நிலை பிறப்பிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அதானோம் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com