பிரிட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்: ட்விட்டரில் பிரசாரத்தை தொடங்கினார்!

பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் ட்விட்டரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 
பிரிட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்: ட்விட்டரில் பிரசாரத்தை தொடங்கினார்!

பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் ட்விட்டரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டு தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 

பிரதமா் போரிஸ் ஜான்சன் அரசு மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுவதால், பிரிட்டன் நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதார அமைச்சா் சாஜித் ஜாவித் ஆகியோா் அதிருப்தியில் தங்கள் பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனா். இது போரிஸ் ஜான்சனுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது. 

இதுகுறித்து ரிஷி சுனக் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘இந்த அரசு திறமையுடன் சரியான முறையில் செயல்பட வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கிறாா்கள். ஆகவே நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவது கடைசியாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

பிரிட்டனில் இதற்கு முன்பு இல்லாத வகையில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜிநாமா செய்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு நெருக்கடியை அளித்தனர். இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை வியாழக்கிழமை ராஜிநாமா செய்ததுடன், கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்நிலையில், நிதியமைச்சா் பதவியிலிருந்து அண்மையில் விலகிய இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமர் போட்டியில் தானும் உள்ளதாகக் கூறி ட்விட்டரில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில், நான் கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்காகப் போட்டியிடுகிறேன். நாம் நம்பிக்கையை மீட்டெடுப்போம். பொருளாதாரத்தை மீள் கட்டமைப்போம். நாட்டை மீண்டும் ஒன்றுபடுத்துவோம் என்று கூறி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.  

இந்தப் பதிவுடன் 3 நிமிடங்கள் ஓடும் விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில் ரிஷி சுனக், அவரது பெறோர் எப்படி தங்களை நிரூபிக்க போராடினார்கள், எப்படி திருமணம் செய்து கொண்டனர், எப்படி பிரிட்டன் நல்லதொரு எதிர்காலத்தை அவர்களுக்கு உறுதி செய்தது ஆகிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், அதில் ரிச்மாண்ட் தொகுதி எம்.பி.யான ரிஷி சுனக், "இந்தத் தருணத்தைப் பற்றிக் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும். அதனால்தான் நான் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமர் போட்டியில் இருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தற்போது கட்சியில் போரிஸ் ஜான்ஸனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவா் வாக்கெடுப்பில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரிஷி சுனக் பங்கேற்றால், அவா் பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com