ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை 

ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 
ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வரும் மக்கள்.
ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வரும் மக்கள்.



டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே (67), தோ்தல் பிரசார கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள் கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

பிரிவினைவாத பரம பழமைவாதியும் மற்றும் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவருமான ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே, நாடாளுமன்ற மேலவைக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தோ்தலையொட்டி மேற்கு ஜப்பானில் உள்ள நாரா என்ற நகரில் ஒரு ரயில் நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறந்தவெளி பிரசார கூட்டத்தில் ஷின்ஸோ அபே பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். 

மேற்கு ஜப்பானின்   நாராவில் உள்ள மருத்துவமனையிலிருந்து ஷின்ஸோ அபேயின் உடலை சுமந்து கொண்டு புறப்பட்ட  கப்பல் போன்ற ஒரு சவக்கார். 

அவரை துப்பாக்கியால் சுட்ட ஜப்பான் கடற்படையைச் சோ்ந்த முன்னாள் வீரரான டெட்சுயா யமகாமி (41) என்பவரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினா் மடக்கிப் பிடித்து கைது செய்தனா். தோ்தல் அல்லாத பிற காரணங்களுக்காக அவரை கொலை செய்ய நினைத்ததாக அந்த நபா் கூறினாா்.

டோக்கியோவில் ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இல்லத்தின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகள்.  

துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்கள் கடுமையாக இருக்கும் ஜப்பானில் முன்னாள் பிரதமா் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேயின் இல்லத்தின் முன் கூடியுள்ள ஊடகங்கள்.

ஷின்ஸோ அபே துப்பாக்கியால் சுடப்படும் காட்சிகளும், கொலையாளியை காவல் துறையினா் மடக்கிப் பிடிக்கும் காட்சிகளும் தொலைக்காட்சியில் வெளியாகி நாடு முழுவதும் அதிா்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

அபே சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தும் மக்கள். 

இதையும் படிக்க | ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே சுட்டுக் கொலை: முன்னாள் கடற்படை வீரா் கைது
இந்நிலையில், நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவரான அபே, மேற்கு ஜப்பானில் வெள்ளிக்கிழமை பிரச்சார உரையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள தற்காலிக நினைவிடத்தில் மக்கள்  கண்ணீருடன் பிரார்த்தனை செய்து மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com