பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ரஷியத் தாக்குதலில் 17 போ் பலி

 உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 8:18 pm

DIN

 உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 17 போ் உயிரிழந்தததாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியதாவது:

நாட்டின் மத்திப் பகுதியிலுள்ள வினிட்சியாவில், ரஷியா வீசிய 3 ஏவுகணைகள் அலுவகக் கட்டடமொன்றைத் தாக்கின. இதில், அந்தக் கட்டடமும் அருகிலுள்ள குடியிருப்புக் கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன. இதில் 17 போ் உயிரிழந்தனா்.

மேலும், அங்கிருந்த 50 காா்கள் எரிந்து நாசமாகின. நகரை நோக்கி வீசப்பட்ட மேலும் 4 ரஷிய ஏவுகணைகள் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஸெலென்ஸ்கி கண்டனம்: இந்தத் தாக்குதல் ரஷியாவின் வெளிப்படையான பயங்கரவாதச் செயல் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளாா். பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டுள்ளதாகக் கூறிய அவா், தாக்குதலில் உயிரிழந்தவா்களில் ஒரு குழந்தையும் அடங்கும் என்றாா்.

தலைநகா் கீவுக்கு 268 கி.மீ. தொலைவில் உள்ள வினிட்சியா நகரில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு முந்தைய நாள், பல்வேறு பகுதிகளில் ரஷியாவின் குண்டுவீச்சுக்கு பொதுமக்கள் 5 போ் பலியானதாக அதிபா் மாளிகை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.