டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி காலமானார்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 
டொனால்ட் டிரம்பின் முன்னாள் மனைவி காலமானார்
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் மனைவி இவானா டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். 

தனது மனைவியின் இறப்பைப் பற்றி சமூக வலைத்தளமான ட்ரூத் சோசியசில் டிரம்ப் பதிவிட்டுள்ளார். அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, 

இவானா டிரம்ப் நியூயார்க் நகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவரை நேசிப்பவர்கள் அனைவருக்கும் தெரிவிக்க மிகவும் வருத்தமாக இருக்கிறது. 

அவர் ஒரு அழகான அற்புதமான பெண். மிகச்சிறந்த மற்றும் உத்வேகமான வாழ்க்கையை வாழ்ந்தவர். 

1977இல் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு டொனால்டு டிரம்ப் ஜூனியர், இவங்கா, எரிக் ஆகிய மூன்று  குழந்தைகள் உள்ளனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1992-இல் எங்களுக்கு விவாகரத்து ஆனது. இவரின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார். 

தனது தாய் இவானா குறித்து மகள் இவான்கா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், 

எனது தாயின் மறைவால் மிகவும் மனமுடைந்துள்ளேன். என் அம்மா சிறந்த புத்திசாலி, வசீகரமானவர், அவர் ஒவ்வொரு செயலிலும் வலிமையாகவும், உறுதித்தன்மையுடனும் செயல்படுவார். ஒருபோதும் அவர் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் இழந்ததில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com