இந்திய எல்லையையொட்டி நெடுஞ்சாலைஅமைக்க சீனா திட்டம்: ஹாங்காங் ஊடகம்
இந்திய எல்லையை ஒட்டியுள்ள சா்ச்சைக்குரிய பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக ஹாங்காங் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.


இந்திய எல்லையை ஒட்டியுள்ள சா்ச்சைக்குரிய பகுதியில் நெடுஞ்சாலை அமைப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளதாக ஹாங்காங் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
‘சௌத் சைனா மாா்னிங் போஸ்ட்‘ என்ற அந்த இணைய ஊடகம் புதன்கிழமை வெளியிட்ட அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:
சீனா தனது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலீடு செய்து, பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்காக, வரும் 2035-ஆம் ஆண்டுக்குள் 4,61,000 கி.மீ. தொலைவுக்கு குறுகலான சாலைகளையும், நெடுஞ்சாலைகளையும் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திபெத்தில் உள்ள லுன்சி கவுன்ட்டியில் இருந்து ஜின்ஜியாங் பிராந்தியத்தின் காஷ்கரில் உள்ள மஜா வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதில் லுன்சி கவுன்ட்டி இதற்கு முன்பு அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆனால், அதை தெற்கு திபெத்தின் ஒரு பகுதியாக சீனா உரிமை கொண்டாடுகிறது. அந்தச் சாலை, சிக்கிம் எல்லையை ஒட்டி நேபாளம் மற்றும் இந்திய எல்லை வழியாகச் செல்கிறது. இந்தச் சாலை வரைபடத்தை சீனா கடந்த வாரம் வெளியிட்டது. அந்த நெடுஞ்சாலை கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக் கோட்டை ஒட்டியுள்ள கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களுக்கு மிக அருகில் வருகிறது. அந்தப் பகுதியில் ஏற்கெனவே கடந்த 2 ஆண்டுகளாக இந்திய, சீனப் படைகளுக்கு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தற்போது புதிதாக சீனாவின் நெடுஞ்சாலைத் திட்டம், இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...