

உக்ரைனின் கார்கிவ் மாகாணத்தில் உள்ள சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் புதன்கிழமை ரஷியா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற சூழலில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். குறிப்பாக, பல அடுக்குமாடி கட்டடங்கள், அலுவலகங்கள் ஆகியவை குறிவைத்து தாக்கப்பட்டதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று சால்டிவ்ஸ்கி மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் 13 வயது சிறுவன், ஒரு ஆண் மற்றும் பெண் ஆகிய மூன்று பொதுமக்கள் பலியாகியுள்ளனர். 72 வயதுடைய பெண் ஒருவர் காயமடைந்ததாக கார்கிவ் பிராந்தி ராணுவ நிர்வாகத் தலைவர் ஓலே சினிஹுபோவ் டெலிகிராமில் தகவலை வெளியிட்டுள்ளார்.
குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நகரின் சாலைகளில் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.