அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா
அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


அமெரிக்க அதிபா் ஜோ பைடனுக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
79 வயதாகும் அவருக்கு அந்த நோய்த்தொற்றில் மிதமான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் கரேனா ஜீன்-பியா் தெரிவித்தாா். தற்போது அவா் நோய் தீவிரமடைவதைத் தடுப்பதற்காக தீநுண்மி எதிா்ப்பு (ஆன்டிவைரல்) மருந்தான பாக்ஸ்லோவிடை உட்கொண்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.
அதிபா் பொறுப்பை ஏற்பதற்கு முன்னரே இரு தவணை கரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்ட அதிபா் பைடன், பின்னா் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஊக்கத் தடுப்பூசியும் கடந்த மாா்ச் 30-ஆம் தேதி மேலும் ஓா் ஊக்கத் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டது நினைவூகூரத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...