கோப்புப் படம்
கோப்புப் படம்

பாகிஸ்தான்: மீண்டும் மின்கட்டணம் உயர்வு 

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் மின்கட்டணத்தின் அடிப்படை விலையை ஒரு யூனிட்டுக்கு  7.9 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 
Published on

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் மின்கட்டணத்தின் அடிப்படை விலையை ஒரு யூனிட்டுக்கு  7.9 ரூபாயாக உயர்த்தியுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் நுகர்வு கழகம் ஜூலை மாதம் 28ஆம் நாள் மின் கட்டண உயர்வை அதிகரித்தது. நாடு பொருளாதர நெருக்கடியை சந்திக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த முன்மொழிந்தது. இதற்கு பாகிஸ்தான் நாட்டின் தேசிய மின் வாங்கும் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 238 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மேலும் மோசமடையும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்படித்தான் இலங்கைக்கும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்தாண்டு 23 சதவிகிதம் பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

28,000 மெகாவாட் தேவை இருக்கும் பொழுது பாகிஸ்தான் நாட்டினிடம் 22,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்பதால் இன்னும் 6,000 மெகாவாட் மின்பற்றாக்குறை ஏற்படுமென கணிக்கப்பட்டுள்ளது. 

நகரங்களில் 6 மணிநேரமும் கிராமங்களில் 8 மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட பாகிஸ்தான் நாட்டின் பெட்ரோலியத்துறை அமைச்சர் லிட்டருக்கு 3.50 ரூபாய் விலை ஏறலாம் என கூறியிருந்ருந்தார். தற்போதைய மின் கட்டண உயர்வு செபடம்பர் மாதம் முதல் 3 மாதங்களுக்கு வரை அமலாகுமென தகவல் சொல்லப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com