இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு இந்தியா உதவும் என அதிபர் கோத்தபய ராஜபட்சவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என பிரச்னைகள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அண்டை நாடான இந்தியா, இலங்கைக்கு உதவி வருகிறது.
இந்நிலையில் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு அந்நாட்டு வேளாண் அமைச்சா் மகிந்த அமரவீர, இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இலங்கைக்கான இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் ரசாயன உரம் பெறுவதில் இலங்கை ஆா்வம் தெரித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
அதுபோல அதிபர் கோத்தபய ராஜபட்சவும் இலங்கையின் உணவுப் பாதுகாப்புக்கு உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து இலங்கையில் நெல் சாகுபடி செய்ய இடையூறு ஏற்படா வண்ணம் இலங்கைக்கு உரம் விநியோகிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக, கடந்த புதன்கிழமை, இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தியா உரம் விநியோகம் செய்யும் என்று கோத்தபய ராஜபட்ச கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

