
சிச்சுவான்: சிச்சுவானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவானில் உள்ள யான் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 14,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் முதற்கட்ட புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14 பேர் காயமடைந்துள்ளனர்.
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அடுத்த 15 நிமிடங்களில் 4.5 ரிக்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.