ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இல்லை!

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என உள்நாட்டு எரிவாயு விநியோக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image
இலங்கையில் சிலிண்டர் வாங்குவதற்காக காத்திருக்கும் பெண்.
Updated On :4 ஜூன் 2022, 3:36 am

DIN

இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இல்லை என உள்நாட்டு எரிவாயு விநியோக நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு, உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் அடுத்த 3 நாள்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இருக்காது என்று அந்த நாட்டு எரிபொருள் விநியோக நிறுவனமான 'லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்'  தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த செவ்வாய்கிழமை இலங்கைக்கு வந்த சிலிண்டர்கள் கடைசி இருப்பை நேற்று நிறுவனம் விநியோகித்துள்ளது. அதன்படி, ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மொத்தமாக 16,000 சிலிண்டர்கள் விற்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வருகிற ஞாயிறு அன்று இலங்கையை வந்தடையும், இதனால் சிலிண்டர் விநியோகம் வருகிற செவ்வாய்க்கிழமை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் எரிவாயுவுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.