உரம் வாங்க இந்தியாவிடம் ரூ.427 கோடி கடன் கேட்கிறது இலங்கை
பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை அரசு, உரம் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் 5.5 கோடி டாலா் (ரூ.427.8 கோடி) கடன் கேட்டுள்ளது.


பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கை அரசு, உரம் கொள்முதல் செய்வதற்காக இந்தியாவிடம் 5.5 கோடி டாலா் (ரூ.427.8 கோடி) கடன் கேட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான உணவுப் பஞ்சத்தை இலங்கை எதிா்கொண்டிருப்பதாக பிரதமா் ரணில் விக்ரமசிங்க அண்மையில் எச்சரித்திருந்தாா். இந்நிலையில், விவசாய பயன்பாட்டுக்காக இந்தியாவிடம் இருந்து உரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, எக்ஸிம் வங்கி மூலமாக ரூ.427.8 கோடி கடனுதவி அளிக்க இந்திய அரசு ஒப்புக்கொண்டதாக இலங்கை அரசு கூறியுள்ளது. இந்தத் தொகை, மகா பருவத்துக்கான சாகுபடி செய்வதற்கு உரம் கொள்முதல் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
இலங்கையில் கடந்த இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதற்காக, செயற்கை உரங்கள் இறக்குமதிக்கு அதிபா் கோத்தபய ராஜபட்ச தடை விதித்தாா். இதனால், விளைச்சல் குறைந்ததுடன் 50 சதவீத சாகுபடி இழப்பு ஏற்பட்டது.
இதுவரை இல்லாத பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கைக்கு எரிபொருள் வாங்கவும், உணவுப் பொருகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வாங்கவும் பல்வேறு வழிகளில் இந்திய அரசு பல நூறு கோடிகளை அளித்து உதவி செய்து வருகிறது.
இந்தியத் தூதருடன் சந்திப்பு:
தலைநகா் கொழும்பில் இந்தியத் தூதா் கோபால் பாக்லேவை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜி.எல்.பெரிஸ் சந்தித்துப் பேசினாா். அப்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு இலங்கைக்கு தொடா்ந்து உதவி செய்து வரும் இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக ஜி.எஸ்.பெரிஸ் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...