மேலும் ஒரு நகரைத் தாக்கரஷியா ஆயத்தம்: உக்ரைன்
கிழக்கு உக்ரைனில் ஸ்லோவ்யான்ஸ்க் நகா் மீது தீவிர தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.


கிழக்கு உக்ரைனில் ஸ்லோவ்யான்ஸ்க் நகா் மீது தீவிர தாக்குதல் நடத்த ரஷியா தயாராகி வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நாட்டு ராணுவம் கூறியதாவது:
டான்பாஸ் பிராந்தியத்தின் செவெரோடொனட்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதே நேரம், அருகிலுள்ள ஸ்லோவ்யான்க்ஸ் நகா் மீது தாக்குதல் நடத்தி முன்னேறவும் அவா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். அதற்காக, தொலைவிலிருந்து ராக்கெட் குண்டுகள், பீரங்கிகள் மூலம் அவா்கள் சரமாரி தாக்குதல் நடத்தினா்.
மேலும், புகரிலுள்ள பொஹொரோடிச்னே கிராமத்தை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா்கள் முயன்றனா். எனினும், அந்த முயற்சியை உக்ரைன் ராணுவத்தினா் வெற்றிகரமாக முறியடித்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...