
மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் மிகுந்த அழிவை ஏற்படுத்தும் என ரஷிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து 7-வது நாளாக ரஷியாவின் முப்படைகளும் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் தீவிர தாக்குதலை நடத்தி ரஷியப் படைகள் முன்னேறி வருகின்றது. குறிப்பாக, காவல்துறை அலுவலகங்கள், தொலைத் தொடர்பு கோபுரங்கள், பாதுகாப்பு அமைச்சக கட்டடங்கள் என அரசின் கட்டடங்களை ஏவுகணை மூலம் தாக்குகின்றனர்.
கீவ் மற்றும் கார்கிவ் பகுதிகளில் மிகப் பயங்கரத் தாக்குதலை ரஷிய ராணுவம் கொடுத்து வரும் நிலையில் மூன்றால் உலகப்போர் அணு ஆயுதங்களால் நடத்தப்பட்டால் மிகுந்த அழிவை ஏற்படுத்தும் என ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், உக்ரைனுடனான பேச்சுவார்த்தைக்கு தடையாக இருப்பது அமெரிக்கா தான் எனக் குற்றம் சாட்டியதுடன் மற்ற நாடுகளிலிருந்து ரஷியா தனித்து விடப்படவில்லை எனவும் ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.