கோப்புப்படம்
கோப்புப்படம்

அணு ஆயுத போரை நடத்த மேற்குலக நாடுகள் திட்டம்: ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு

உக்ரைன் விவகாரத்தில், ரஷிய, மேற்குலக நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், ரஷிய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
Published on

அணு ஆயுத போரை நடத்த மேற்குலக நாடுகள் திட்டமிட்டுவருவதாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

நிலம், வான், கடல் என உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், உலக நாடுகளிக்கிடையே பெரும் பதற்றம் நிலவிவருகிறது. இரண்டாம் உலக போருக்கு பிறகு நடைபெறும் மிக பெரிய தாக்குதலாக உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு கருதப்படுகிறது. 

புதின் தலைமையிலான ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க உலக நாடுகளை அமெரிக்கா ஒருங்கிணைத்துவருகிறது. ரஷியாவை தனிமைப்படுத்தக் கோரிவரும் ஆஸ்திரேலியா, உக்ரைனுக்கு உதவி அளித்துவருகிறது. இதேபோல, ரஷிய நிறுவனங்களின் மீது ஜப்பான் தடை விதித்துள்ளது. உக்ரைனிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்று கொள்ள தயார் என்றும் அந்நாடு கூறியுள்ளது.

முன்னதாக, கடந்த சில நாள்களாகவே, உக்ரைன் மீது படையெடுக்க ரஷியா திட்டமிட்டுவருவதாக அமெரிக்கா கூறிவந்தது. அதற்கு ஏற்றார்போல, பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com