உக்ரைனில் செல்லப் பிராணிகளை விட்டுவர மனமில்லாமல் தவிக்கும் இந்திய மருத்துவர்

ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து போர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தனது செல்லப் பிராணிகளை விட்டு வர மனமில்லாமல் இந்திய மருத்து
உக்ரைனில் செல்லப் பிராணியை விட்டுவர மனமில்லாமல் தவிக்கும் இந்திய மருத்துவர்
உக்ரைனில் செல்லப் பிராணியை விட்டுவர மனமில்லாமல் தவிக்கும் இந்திய மருத்துவர்


டோன்பாஸ்: ரஷிய படையெடுப்பைத் தொடர்ந்து போர் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், தனது செல்லப் பிராணிகளை விட்டு வர மனமில்லாமல் இந்திய மருத்துவர் ஒருவர் தவித்து வருகிறார்.

தான் வசித்து வரும் பூனையினத்தைச் சேர்ந்த கருப்பு சிறுத்தை மற்றும் ஜாகுவார் இன சிறுத்தைகளை உடன் அழைத்து வரவும் முடியாமல், உக்ரைனிலேயே விட்டுவிட்டு வரவும் முடியாமல் தவிக்கிறார் மருத்துவர் கிரிகுமார் பட்டீல்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் வசித்து வரும் கிரிகுமார் பட்டீல், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். 2007ஆம் ஆண்டு இங்கு எம்பிபிஎஸ் படிக்க வந்தவர். 2014-இல் படித்து முடித்து, இங்கேயே தங்கிவிட்டார். 2019ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற விலங்குகளை வளர்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. யூ - டியூப்பில் பிரபலமாக இருக்கும் இவரை ஜாகுவார் குமார் என்றே அழைக்கிறார்கள்.

தன்னிடம் இருக்கும் கருப்பு சிறுத்தை உள்ளிட்ட இரண்டு சிறுத்தைகளை பராமரிப்பது தொடர்பாக கீவ்வில் உள்ள உயிரியல் பூங்காவில் பேசியுள்ளார். கருப்பு சிறுத்தை 6 மாதக் குட்டியாகவும், ஜாகுவார் சிறுத்தை 20 மாதங்கள் ஆன நிலையில் இவர் பராமரித்து வருகிறார்.

முன்னதாக, தாங்கள் வளர்த்து வரும் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகளை விட்டு வரமனமில்லாமல் தவித்த இந்தியர்களுக்காக, அவர்களது செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்த வர இந்திய அரசு அனுமதி வழங்கி, விலங்குகள் ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிலையில், கிரிகுமார், தன்னுடன் இரண்டு சிறுத்தைகளை அழைத்து வர உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கப்பெறாததால், தான் நாடு திரும்புவதை ஒத்திவைத்து வருகிறார் கிரிகுமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com