உக்ரைனில் எத்தனை மக்கள் பலி?: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம்

உக்ரைன் மீது ரஷிய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,207 பொதுமக்கள் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. 

இதில் 406 பேர் கொல்லப்பட்டதாகவும், 801 பேர் படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் சேர்ந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனில் ரஷிய ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  

போரை நிறுத்தக் கோரி சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் ரஷியாவுக்கு அழுத்தம் தந்தாலும் கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து 12ஆவது நாளாக உக்ரைனை தாக்கி வருகின்றனர். 

முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் கைப்பற்றிய நிலையில், அரசு அலுவலங்கள் மீதும், உற்பத்தி நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இதில் உக்ரைன் ராணுவத்தினர் உயிரிழப்பதுடன் மட்டுமில்லாமல், ஏராளமான பொதுமக்களும் பலியாகியுள்ளனர். கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் மார்ச் 6ஆம் தேதி வரையிலான நிலவரப்படி இதுவரை 1,207 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அவையின் மனித உரிமைகள் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் 406 பேர் கொல்லப்பட்டதாகவும், 801 பேர் படுகாயமடைந்து உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com